காம்போஜ தேசத்து மன்னன் யஷோவர்மன் பல ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தான். பல பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்தபின் அவனுக்கு ஒரு புத்திரன் பிறந்தான். ஆனால் பிறந்த குழந்தையோ மனநலம் குன்றியதாக இருந்தது. குழந்தை பிறந்த நேரம், அவன் தேசத்தையும் பெரும் பஞ்சம் பீடித்துக் கொண்டது. மன்னனும் மக்களும் பெரும் கஷ்டத்துக்கு உள்ளானர். மன்னனும் மந்திரி ப்ரதானிகளும் அருகிலிருந்த ஆரண்யகத்தில் வசித்த ஒரு மஹரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்று, அவரை வணங்கி கஷ்டம் தீர வழி கேட்டனர். அவர் ஞானதிருஷ்டியினால் கண்டு பின்வருமாறு கூறினார். “மன்னா, உன் முன்னோர்களும் ப்ரஜைகளும் காலம் காலமாக அந்த பரமாத்மாவான ஶ்ரீமன்.நாராயணனை, சூர்யதேவன் ரூபத்தில் ரத சப்தமி நாள் அன்று வழிபட்டு வந்தனர். ஆனால், காலத்தின் கோலத்தால் நீயும் உன் ப்ரஜைகளும், இதை மறந்து இதர தேவதைகளை வணங்குகின்றீர்கள். அதனால் வந்த வினைதான் இது. மீண்டும் ரதசப்தமி பூஜையைத் தொடங்கி செய்வீர்களாக. உங்கள் எல்லோருக்கும் சுபிக்ஷம் உண்டாகும்.
மன்னனும் அவ்வாறே ரத சப்தமி பூஜையை நாடெங்கும் கொண்டாட உத்தரவிட்டான். தானும் ரத சப்தமி அன்று கோலாகலமாக பூஜை செய்தான். மன்னனின் மகனும் குணமடைந்தான். மழை பொழிந்து நாடும் சீரும் சிறப்புமாக ஆனது.
நம் ஸௌராஷ்ட்ர மக்களின் கதையும் இது தான் என்று நினைக்கின்றேன். பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களும் "ரத சப்தமி’ அன்று பூஜையை சிறப்பாக கொண்டாடினார்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. இப்போது நாம் இந்த வழக்கத்தினை மறந்தவர்களாக இருக்கின்றோம். நாமும் மீண்டும் ரத சப்தமி பூஜையை சிறப்பாக செய்தால் நம் சமூகமும் சுபிக்ஷமடையும் என்பதில் சந்தேகமில்லை.
பெருமாள் கோவில்களிலும் ரத சப்தமி
see next post for information - click on the older posts below to see next post
No comments:
Post a Comment