நம் ஸௌராஷ்ட்ர மக்களோ பெரும்பாலும் வைஷ்ணவர்கள். நம் ஸௌராஷ்ட்ர கோவில்களோ பெரும்பாலும் வைஷ்ணவக் கோவில்கள். அப்படி இருக்க ரத சப்தமி கொண்டாடலாமா என்ற கேள்வியை பலர் எழுப்பக்கூடும். திருமலை திருப்பதியிலும் ரத சப்தமி அன்று ஶ்ரீ.வேங்கடேச பெருமாளுக்கு கோலாகலமாக, ஏக தின பிரம்மோத்ஸவம்” (ஒரு நாள் ப்ரம்மோத்ஸவம்) என்று கொண்டாடுகின்றனர். அன்று ஶ்ரீ.வேங்கடாசலபதி ஸ்வாமி, ஶ்ரீ.தேவி, பூதேவி ஸமேதமாக, திருமலையின் மாட வீதிகளில், ஸப்த (ஏழு) வாஹனங்களில் பவனி வருவார். அதிகாலையில் சூர்யப் பிரபை வாஹனத்தில் தொடங்கும். பின், சேஷ வாஹனம், பின் கிரமேண கருட வாஹனம், ஹனுமான் வாஹனம், கல்பக விருஷ வாஹனம், சர்வபூபாள வாஹனம் என்று வந்து கடைசியில் ஏழாவதாக சந்திரப் பிரபை வாஹனத்தில் முடியும்.
ஶ்ரீரங்கம் மற்றும் இன்னும் பல பெருமாள் கோவில்களிலும் ரத சப்தமி அன்று விசேஷமாக கொண்டாடுகின்றனர்.
கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை பெருமாள் கோவிலிலும் ரத சப்தமி அன்று மிகவும் சிறப்பாக சூர்யப் பிரபை வாஹனத்தில் பெருமாள் வீதி உலா வருவார்.
No comments:
Post a Comment