நம் ஸௌராஷ்ர மக்களுக்கு மிக உத்தமமான, பவித்திரமான நாள் "ரத ஸப்தமி" என்று ஓலைச் சுவடிகள் கூறுகின்றன. "ரத ஸப்தமி" என்ற நாளில் அப்படி என்ன விசேஷம் இருக்கின்றது?
"ரத ஸப்தமி" என்பது சூர்ய ஜயந்தி. சூர்ய பகவானின் பிறந்த தினம். அந்த பரம்பொருளான ஶ்ரீமன்.நாராயணனே மஹரிஷி.காஷ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும், சூர்ய பகவானாக பிறந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் (நெசவுத் தொழில் உள்பட) எல்லோருக்கும் இத்திருநாள் வரப்போகும் புது வருடத்தின் அறிகுறி. இது விரைவில் சைத்திர மாததில் வரப்பொகும் ஸௌராஷ்ட்ர மக்களின் வருடப்பிறப்பான உகாதியையும் குறிக்கின்றது. வசந்த காலத்தின் பிறப்பும் இன்று தான்.
இத்திருநாளில் தான் சூர்ய பகவான் அவரது தேரை மகர ரேகையிலிருந்து வடக்கு நோக்கி திருப்புகின்றார். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, கலியாப்தம் "மாக" மாததில், உத்தராயண புண்ய காலத்தில். சுக்ல பஷத்தில், அதாவது அமாவாசைக்குப் பிறகு "சப்தமி". அதாவது ஏழாவது நாள். அன்று தான் "ரத ஸப்தமி".
சூர்ய பகவானின் ரத சாரதி "ஆருணன்". அந்த ரதத்திற்கு ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும், அது வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றது. அந்த ரதத்திற்கு பன்னிரண்டு சக்கரங்கள். அவை வருடத்தின் பன்னிரு சம்வத்சரங்களைக் குறிக்கின்றன. அதாவது மாதங்கள்.
"ரத ஸப்தமி".
அன்றிலிருந்து ஐந்து நாட்கள்
பீஷ்மபஞ்சகம். ரத ஸப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி ஆகிய ஐந்து நாட்களுமே பவித்திரமான நாட்கள்.
பீஷ்மபஞ்சகத்தின் பெருமைகள் என்ன?
see next post.
No comments:
Post a Comment