Friday, August 5, 2022

ஸௌராஷ்ட்ர கலாசாரம் மற்றும் பாரம்பரியம்

ஸௌராஷ்ட்ர கலாசாரம் மற்றும் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்.   நம் கலாச்சாரம், பாரம் பரியம், சம்பிரதாயம் இவற்றையெல்லாம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு விடை வேண்டுமானால், பின்வரும் சான்றுகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். 

1930ல் திரு. குஜுவா சங்கர சர்மா எழுதிய "சாலி ஹோத்திர ஆபஸ்தம்ப ஸூத்திர பிரவர காண்டம்.

1951ல் விப்ரபந்து கு.வெ.பத்மநாபைய்யர் எழுதிய "கோத்ரு காண்டொ". 

மேற்கூறிய நூல்களிலிருந்து நாம் அறிவது என்ன வென்றால், நாம் கிருஷ்ண யஜுர் வேதம், ஆபஸ்தம்ப ஸூத்திரப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 64 கோத்திரங்கள் கொண்ட பிராம்மணர்கள் என்பது தான்.  

இதை மனதில் கொண்டு நம் ஸௌராஷ்ட்ர பிள்ளைகளுக்கு 7 வயதில் உபநயனம் செய்விக்க வேண்டும். (அறியா வயதான 7 வயதில் நம் பேச்சை பிள்ளைகள் கேட்பார்கள்)  

வசதி உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தனியாக உபநயனம் செய்விக்கலாம். வசதி இல்லாதவர்களுக்கு நம் ஆர்வமுள்ள நிருவனங்கள் ஸமஷ்டி உபநயனம் செய்து வைக்கலாம்.


நம் ஸௌராஷ்ட்ர பிராம்மண வைதீகர்களுக்கு (புரோஹிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள்) ஒரு அன்பான வேண்டுகோள்.
சம்ஸ்கிருதம் தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளவும். வேத மந்திரங்களை சரியாக உச்சரிக்க வேண்டும். இல்லையென்றால் அது மாற்று பலனைக் கொடுக்கும். தமிழ் எழுத்தில் சம்ஸ்கிருதம் படித்தாலும் சரியான உச்சரிப்பு வராது...... ஆகையால், சம்ஸ்கிருத தேவநாகரி எழுத்தில் கற்று படிக்கவும்.  


No comments:

Post a Comment